Latestஇந்தியா

கோயில் வழிபாட்டுக்கு சென்றவர்கள்: மின்சாரம் பாய்ந்து நால்வர் மரணம்!

நாக்பூர்,ஜூன்.27- ஓடும் பஸ்ஸில் மின்சாரம் பாய்ந்து நான்கு பேர் உடல் கருகி உயிரிழந்தனர் .கோவிலுக்கு சென்றபோது இந்த பரிதாபம் நிகழ்ந்துள்ளது. பீகார் மாநிலம் நாக்பூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட மாட்போ கிராமத்தில் இருந்து அறுபதுக்கும் மேற்பட்டோர் பஸ்சில் ஜம்மு மாவட்ட வனப்பகுதியில் அமைந்துள்ள கோயிலுக்குச் சென்று கொண்டிருந்தனர்.

யோகியா அஸ்தான் என்ற இடத்தின் அருகே சென்ற போது எதிரே வந்த ஆட்டோக்கு வழி விடுவதற்காக டிரைவர் சாலையோரமாக பஸ்சை திருப்பினார் .அப்போது எதிர்பாராதவிதமாக அந்த வழியாக இருந்த மின் கம்பியில் பஸ் உரசியது. இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர் .

18 பேர் காயமடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கின்றனர் . சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் மின் இணைப்பைத் துண்டித்துவிட்டு காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர் .

அங்கு சிகிச்சை பலனின்றி மேலும் ஒருவர் பலியானார் சிகிச்சை பெற்று வருபவர்களில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது .விபத்தில் பலியானவர்களில் 3 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கோயில் வழிபாட்டுக்கு சென்றவர்கள் பலியான சம்பவத்தை அறிந்து அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker