Latestஉலகம்

டேப்லெட் எரிந்து மெத்தை தீப்பிடித்தது! 11 வயது சிறுவன் உயிர் தப்பினான்!

லண்டன், ஜுன் 27 – கேலம் ஹெவ்கின் என்ற 11 வயது சிறுவன் தூங்கும்போது, அருகில் இருந்த ”டேப்லெட்” சாதனத்தால்  படுக்கை மெத்தை தீப்பற்றியது. எனினும் சிறுவன் உயிர் பிழைத்தான், என்று மிரர்  ஊடகம்  செய்தி வெளியிட்டது.

இங்கிலாந்தின் ஸ்டாஃபோர்ட்ஷையரில் உள்ள தனது இல்லத்தில் வியாழக்கிழமை தூக்கத்திலிருந்து எழுந்தபோது “சாம்சிங் டேப்லெட்” எரிந்து, மெத்தையில் தீ பரவியிருப்பதை  அச்சிறுவன் உணர்ந்தான்.

ஸ்டாஃபோர்ட்ஷையர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் கூற்றின்படி, அதிர்ஷ்டவசமாக நெருப்பு தானாக அணைந்து விட்டதால், அச்சிறுவனின் உயிருக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்றனர்.

டேப்லெட்டை வாங்கி நான்கு ஆண்டுகள் ஆகிய நிலையில், அச்சிறுவன் அசல் சார்ஜரைப் பயன்படுத்தியுள்ளான். இருப்பினும், ஒன்பது மணி நேரம் ஆன பின்பும் டேப்லெட் சார்ஜரியிலிருந்து அகற்றப்படாமல் இருந்ததால், அது  சூடாகி எரிந்தது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, தங்கள் செல்போன்கள் மற்றும் டேப்லெட்டுகள் போன்ற கணினி உபகரணங்களை அதிக நேரம் சார்ஜ் செய்ய வேண்டாம் என அதிகாரிகள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினர்.

தந்தை கால்லம், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் தூங்கும்போது தங்கள் கைபேசிகள் அல்லது டேப்லெட்களை மெத்தையில் வைக்காமல் பார்த்துக் கொள்ளும்படி கேட்டுக்கொண்டனர்.

“சம்பவம் நடந்த இரவு, நாங்கள் கைப்பேசி சார்ஜரில் வைப்பது இல்லை. எதிர்கொள்ள கூடிய அபாயங்களைப் பற்றி சிந்திக்காமல் பலர் கைப்பேசியை சார்ஜ்ஜில்  போட்டுவிட்டு மெத்தையின் கீழ் வைப்பவர்களும் உள்ளனர் என  அவர் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker