Latestமலேசியா

பள்ளிக்குப் போகவில்லையா? என கேட்டதற்காக வீட்டை விட்டு ஓடிய சகோதரர்கள்!

பொந்தியான், ஜுன்.27 –  பள்ளிக்கு ஏன்  போகவில்லை என்று தந்தை கோபத்துடன் கேட்டதால்,  அண்ணன்-தம்பி இருவர் வீட்டை விட்டு ஓடி விட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை, தந்தையிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய முகமட் அடாம் , வயது 16 மற்றும் முகமட் ஃபைருஸ், வயது 12 ஆகிய இருவரும் இன்று காலை 4.30 மணியளவில் பிலெட் ஜாசா குடியிருப்புப் பகுதியின் தொழுகை இடத்தில் கண்டுபிடிக்கப் பட்டதாகப் பொந்தியான் மாவட்ட போலீஸ் தலைவர்  முஸ்தாபா பக்ரி தெரிவித்தார்.

அவர்களிடம்  விசாரித்தபோது, இருவரும் பொந்தியானிலிருந்து பேருந்தின் மூலம்  லார்க்கின் பஸ் நிலையத்தை வந்தடைந்ததாகவும், அங்கிருந்து தாமான் உங்கு துன் அமீனாவுக்கு டாக்சியில் சென்றதாகக் கூறினர்.

பள்ளியில்  ஒரே வகுப்பைச் சேர்ந்த  மாணவன் ஒருவன், அவர்களைத் தொந்தரவு செய்து கடுமையான வார்த்தைகளைப்  பயன்படுத்தியதால் பள்ளிக்குச் செல்ல மறுப்பதாகப் போலீசாரிடம் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக, கடந்த செவ்வாய்க்கிழமை பள்ளிக்குச் சென்ற இரு உடன்பிறப்புகளைக் காணவில்லை என்று போலீசுக்குப் புகார் கிடைத்ததை அடுத்து,  அவர்களைத் தேடும் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker