Latestமலேசியா

30 வயதுக்கும் குறைந்த அரசு ஊழியர்களுக்கு – சொந்த வீடு இல்லை! – கியூபெக்ஸ்

கோலாலம்பூர், ஜூன் 27 – 30 வயதுக்கும் குறைந்த 95 விழுக்காட்டு அரசு ஊழியர்களுக்குச் சொந்த வீடுகள் இல்லை என அரசு ஊழியர் சங்கங்களின்  சம்மேளனமான கியூபெக்ஸின் தலைவர் ஆசே மூடா தெரிவித்துள்ளார்.

பெரும்பாலானோரின் சம்பளம் 4,000 ரிங்கிட்டுக்கும் குறைவாக இருப்பதால் அவர்கள் வீடு வாங்க முடியாத நிலையில் இருக்கின்றனர். அதே போன்று 40 வயதுக்கும் குறைவான 75 விழுக்காட்டு ஊழியர்களுக்கும் சொந்த வீடுகள் இல்லையென அவர் சுட்டிக்காட்டினார்.

பல வீடுகள் விற்கப்படாமல் இருப்பதாகச் சொல்லப்பட்டாலும், அவை யாவும் 300,000 ரிங்கிட்டுக்கும் அதிகமான விலையில் இருப்பதாகவும் பெரும்பாலான அரசு ஊழியர்கள் 250,000 ரிங்கிட்டுக்கும் குறைவான விலையில் இருக்கும் வீடுகளையே வாங்க முடியும் நிலையில் இருக்கின்றனர்.

இதனிடையே, 16 லட்சம் அரசு ஊழியர்களில் 55 விழுக்காட்டு ஊழியர்கள் வீடு வாங்குவதற்கான கடனை அரசின் பொது வீடமைப்பு நிதியிலிருந்து  பெற்றிருப்பதாக ஆசே மூடா தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker