Latestமலேசியா

வெளிநாட்டு விசா ஊழல்: இன்று ஸாஹிட் மீது மேலும் 33 குற்றச்சாட்டுகள்

ஷா ஆலம், ஜூன். 27- இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வெளிநாட்டு விசா நடைமுறை தொடர்பாக 42.76 மில்லியன் ரிங்கிட் ஊழல் புரிந்ததாக அம்னோவின் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி மீது 33 ஊழல் குற்றச்சாட்டுக்கள் இன்று நீதிமன்றத்தில் சுமத்தப்பட்டன.

செஷன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி ரோஷிலா சாலே முன்னிலையில் முன்னாள் துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான ஸாஹிட் ஹமிடிக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் வாசிக்கப்பட்ட போது அந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து அவர் விசாரணை கூறினார்.

இதேபோன்று விசா தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இவருக்கு எதிராக நேற்று 4.2 மில்லியன் சிங்கப்பூர் டாலர் சம்பந்தப்பட்ட 7 ஊழல் குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று நீதிமன்றத்தில் அவருக்கு ஐந்து லட்சம் ரிங்கிட் மற்றும் ஒரு நபர் உத்தரவாததத்தில் ஜாமீன் அனுமதிக்கப்பட்டது. இந்த வழக்கு ஜூலை 29ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் செவி மடுக்கப்படும்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker