Latestவிளையாட்டு

75 ஆம் ஆண்டு சுதந்திர தினம்: நீதா அம்பானியின் புது வியூகம்!

மும்பை,ஜூன்.27- நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு 2022 – 2023 ஆம் ஆண்டுக்கான அனைத்துலக ஒலிம்பிக் கமிட்டி கூட்டம் மும்பையில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்துள்ளது இந்தியா.

சுவிட்சர்லாந்தின் லாஸன்ஸில் நடைபெற்ற 134வது அனைத்துலக ஒலிம்பிக் கமிட்டி கூட்டத்தில் இந்தியாவில் இருந்து அனைத்துலக ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினராக பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மனைவியும் ரிலையன்ஸ் அறக்கட்டளையின் நிறுவனருமான நீதா அம்பானியும் இந்திய ஒலிம்பிக் கமிட்டி தலைவர் நரேந்திர துருவ் பத்ராவும் கலந்து கொண்டனர் .

அப்போது 2022 முதல் 2023 ஆம் ஆண்டுக்கான அனைத்துலக ஒலிம்பிக் கமிட்டி கூட்டம் மும்பையில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அதற்கான திட்ட வடிவமைப்பையும் ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் தாமஸ் பெக்கிடம் வழங்கினார் .

இந்தியாவில் விளையாட்டுத் துறையை மேம்படுத்தவும் விளையாட்டு குறித்த விழிப்புணர்வு இளைஞர்கள் மத்தியில் ஊக்குவிக்கவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மேலும் சிறப்பு சேர்க்கும் விதமாக ஒலிம்பிக் கமிட்டி கூட்டத்தை மும்பையில் நடத்த இப்போதே அஸ்திவாரம் போடப்பட்டு உள்ளது . இவர் இக்கூட்டத்தில் அனைத்துலக ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார் என்பது கூடுதல். தகவல்

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker