Latestஉலகம்

கல்லூரி மாணவியை 3 சுறாக்கள் தாக்கிக் கொன்ற துயரம்!

ரோஸ் ஐலேண்ட், ஜுன் 28 – அமெரிக்காவைச் சேர்ந்த 21 வயது கல்லூரி மாணவியான  ஜோர்டான் லிண்ட்சே தனது குடும்பத்தினருடன் பஹாமாஸின் ரோஸ் ஐலேண்ட் தீவு அருகே விடுமுறைக்குச் சென்றபோது கடலில்  மூன்று சுறாக்களால் தாக்கப்பட்டு மாண்டார்.

அந்நேரத்தில் அவர் கடலடியை தெளிவாக பார்ப்பதற்காக  முக்குளிப்பு கவசம் அணிந்திருந்தார். தண்ணீருக்குள் இருந்ததால் அவரது பெற்றோரிடமிருந்து வந்த எச்சரிக்கையையும் அவரால் கேட்க முடியவில்லை.

கலிபோர்னியாவைச் சேர்ந்த ஜோர்டான் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, நேற்று முன்தினம் இறந்துவிட்டதாகப்  போலீசார் தெரிவித்தனர்.

ஜோர்டான் மிக அழகான, மென்மையான பெண். அவள் ஒரு அன்பான மகள், சகோதரி, காதலி மற்றும் நண்பர் என்று அவரது குடும்பத்தினர் அஞ்சலியின் போது தெரிவித்தனர்.

ஜோர்டானின் கைகள், கால்கள் மற்றும் அடிப்பகுதியில் சுறாக்களால் கடிக்கப்பட்டிருந்தார்.  மேலும் தாக்குதலில் வலது கையையும் இழந்தார்.

அவரது இறுதிச் சடங்கின் செலவுகளை ஈடுகட்டவும், அவரது உடலை  கலிபோர்னியாவிற்குக் கொண்டு செல்வதற்காக நிதி சேர்க்கவும்  அவரது குடும்பத்தினர் ”GoFundMe” எனும் பக்கத்தை அமைத்துள்ளனர்.

ஜோர்டான் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள லயோலா மேரிமவுண்ட் பல்கலைக் கழகத்தில் தகவல் தொடர்புத் துறை மாணவியாவார். மேலும் அவர் ஒரு தீவிர விலங்குப் பிரியர்.  காலநிலை மாற்ற வக்கீல் என்றும் தெரியவந்துள்ளது. பஹாமாஸ் சுற்றுலா வாரியம் தனது இரங்கலில்  ஆழ்ந்த அனுதாபங்களைத்  தெரிவித்திருந்தது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker