Latestஉலகம்

தனது பிள்ளைகள்  ஓரினச் சேர்க்கையாளராக இருந்தால்?  -இளவரசர் வில்லியம்  பதில்

லண்டன் ஜூன், 28 தமது பிள்ளைகளில் ஒருவர் ஓரினச் சேர்க்கையாளராக பின்னாளில் அறியப் பட்டால் அதை கண்டிப்பாக தாம் ஏற்றுக் கொள்வேன் எனவும் அதில் சிறிதும் சந்தேகமே வேண்டாம் என பிரிட்டன் இளவரசர் வில்லியம் பதிலளித்துள்ளார் .

இருப்பினும் அவர்கள் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களின் மீது திணிக்கப்படும் கூடுதல் துன்புறுத்தல் குறித்து தாம் வருத்தப்படுவதாக இளவரசர் வில்லியம் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு ஆதரவாகவும் வீடற்றவர்களின் நல்வாழ்விற்காக முன்னெடுக்கப்படும் தொண்டு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட வில்லியம் மேற்கூறியவாறு கருத்தை பதிவுசெய்தார்.

தமது பிள்ளைகளில் ஒருவர் ஓரினச்சேர்க்கையாளராக அறியப் பட்டால் தமக்கும் எவ்வித பதட்டமும் இல்லை எனவும் அதனால் இந்தச் சமூகத்தில் இருந்து அவர்களுக்கு அளிக்கப்படும் அழுத்தம் அல்லது அவர்கள் எதிர்கொள்ளவிருக்கும் அழுத்தம் தொடர்பிலேயே தான் வருத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.

அதனால் அவர்களின் எதிர்காலம் கடுமையாக அமையும் என்பது நமது எண்ணம் எல்லாம் இருக்கும் என்று பதிலளித்துள்ளார் .மேலும் தான் தந்தையான பின்னர் இவ்வாறான ஒரு எண்ணம் மட்டும் தமக்குள் இருந்தது எனவும் இளவரசர் வில்லியம் பகிரங்கப்படுத்தியுள்ளது.

சமூகத்தை விடவும் தனது குடும்ப அந்தஸ்து இதற்கு தடையாக இருக்கலாம் இருப்பினும் தமது முழு ஆதரவும் அவர்களுக்கு உண்டு என அழுத்தமாக தெரிவித்துள்ளார்

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker