Latestஉலகம்

வளர்ப்பு நாயை சுடுநீரில் அவித்து, பிள்ளையைப் பார்க்கச் சொன்ன தாய் !

நியூ மெக்ஸிகோ, ஜூன்’.28 –  மொத்தம் 15 குழந்தைகளுக்குத் தாயான மாது,  தன்  வளர்ப்பு நாயை சுடுநீரில் அவிக்கும் காட்சியைப் பார்க்கச் சொல்லி பிள்ளைகளைத் துன்புறுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

53 வயதான மார்தா க்ரூச் எனும் அந்த மாது தன் பிள்ளையின்  வளர்ப்பு நாயை அவித்ததோடு, தம் குழந்தைகளுக்கு  உணவேதும் அளிக்காமல் பட்டினி போட்டு, அடித்துத் துன்புறுத்திய வழக்கிலும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

அம்மாது தன் வளர்ப்பு குட்டி நாயை பெரிய பானை ஒன்றினுள் போட்டு அவிக்கும் கொடூரக் காட்சியைத் தன் பிள்ளையைப்  பார்க்க சொல்லி துன்புறுத்தியதாக கூறப்பட்டுள்ளது.

அம்மாது குழந்தைகளைத் துன்புறுத்தியதற்காகவும் வளர்ப்பு  நாயை , அவித்து  கொடுஞ் செயல் புரிந்ததற்காகவும் அவரது கணவர் விசாரணையில் போது இடையூறாக இருந்ததற்காகவும்  குற்றஞ்சாட்டப்பட்டனர்.

தன்னைத் துன்புறுத்தியதாகவும் பெற்றோர் புறக்கணித்தாகவும் குற்றஞ்சாட்டி அத்தம்பதிகளின் பிள்ளை ஒருவர் அவர்கள்மீது புகார் கொடுத்துள்ளார்.

17 வயது மகளை அடித்தாகவும் , அவரின் வளர்ப்பு நாயைச் சுட்டபின் அதனை அவித்ததாகவும்  க்ரூச் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சான் ஜுவான் நகர  ஷெரிப்பின் விசாரணைப்படி அத்தம்பதிகள்,  தங்கள் பிள்ளைகளைப்   பள்ளிக்கு அனுப்பாமலும், உணவளிக்காமலும்,  சமூக  பார்வையிலிருந்து மறைத்ததாகவும்   குறிப்பிட்டு உள்ளனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker