Latestஉலகம்

(VIDEO)-காலணி திருடிய கிரேப் உணவு விநியோகிப்பாளர் பிடிபட்டார்

சிங்கப்பூர், ஜூன் 28 – நேற்று ”சிங்கப்பூர் ஷேர்-ஷேர்” என்ற பேஸ்புக் குழுவில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோ பதிவில் “கிரேப் டெலிவரி மேன்” ஒருவர், வாடிக்கையாளரின் உணவை வழங்கிய பின்னர்,  ஒரு ஜோடி காலணிகளைத் திருடியது, அங்கு பொருத்தப்பட்டிருந்த ரகசிய கண்காணிப்புக் காமிராவில் (சிசிடிவி) கடந்த ஜூன் 20 அன்று பதிவு செய்யப்பட்டு பகிரப்பட்டது

வாடிக்கையாளர் வீட்டிற்குள் சென்று உணவை விநியோகித்து கதவை மூடிய பிறகு, கிரேப் விநியோகிப்பாளர் ஒரு ஜோடி காலணிகளை எடுத்து,  தனது உணவுக்கான  பையில் வைப்பதை அக்காமிராவில் பதிவாகியது.

Grab food delivery rider delivers food, and also steal shoes.

Posted by Desnis Teo on Wednesday, 26 June 2019

இந்தச் சம்பவத்தின் காட்சிகள் சமூக வளைத்தளங்களில் 3,000க்கும் மேற்பட்டோரால் பகிரப்பட்டு வைரலாகியது. வீடியோவின் கீழ் கருத்துப் பிரிவில், ஒருவர் கிரேப் உணவுச் சீருடையில் இருந்தபோது உணவுப் பையில் காலணிகளை வைப்பதன் மூலம் வெறுப்படைந்ததாகக் குறிப்பிட்டார்.

அவர் வழங்கும் அந்த உணவு உப்பு மீன் மற்றும் ஊறவைத்த சாக்ஸ் போல துர்நாற்றம் வீசும் என்று உறுப்பினர் ஷிரின் நிஸ்ஸா கருத்துத் தெரிவித்தார். அவர் தனது வெறுப்பை வெளிப்படுத்த வாந்தி படத்தைப்  பயன்படுத்தினார்.

மற்றொருவரான மார்க் டான், கிரேப் உணவு  நிறுவனத்தை “பைகள் உணவுக்காகவே தவிர, காலணிகளுக்காக அல்ல” என்பதை நினைவூட்டுவதாகக் குறிப்பிட்டார்.

கிரேப் நிறுவனம்,  வீடியோவைப் பற்றி அறிந்திருப்பதாகவும், இது குறித்து விசாரித்து வருவதாகவும் பதிலளித்தது. கிரேப் அத்தகைய நடத்தையை ஒருபோதும் மன்னிக்காது.  இச்செயலைப் புரிந்த அந்த விநியோகிப்பாளரை பதவி நீக்கம்  செய்வோம் என்று நியூஸ் ஏசியா சேனல் (சிஎன்ஏ) ஊடகத்திற்குத் தெரிவித்துள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker