Latestஉலகம்

(VIDEO)-சக ஊழியர்களுக்கு மதிய உணவு: ”பஞ்ஜி ஜம்பிங்” சாகசம்

பெய்ஜிங், ஜுன் 28 –  ஒரு பெண் ”பஞ்ஜி ஜம்பிங்” சாகசம் செய்து மதிய உணவை வழங்கும் வீடியோ பதிவு சமீபத்தில் வைரலாகியுள்ளது.

வீடியோவில், அந்தப் பெண் தனது சக ஊழியர் குன்று ஒன்றின் அடிப்பகுதியில் காத்திருந்தபோது கையில் மதிய உணவுப் பெட்டியுடன் மேலிருந்து குதிக்கத் தயாராகி வருவதைக் காணலாம்.

நெக்ஸ்ட் ஷார்க் என்ற பெண்ணின் கூற்றின் படி, வான் தியாண்டி சோங்கிங்கில் உள்ள வான்ஷெங் ட்ரீம் ஆர்டோவிசியன் பூங்காவில் பணியாளராக உள்ளார். கட்டமைப்பு இலாகா  துறையில் பணியாளராக இருக்கும் அவர், வேலையின் ஒரு பகுதியாக ஒவ்வொரு நாளும் 200 சகஊழியர்களுக்கு மதிய உணவை வழங்குகிறார்.ஒரு வருடத்திற்கு முன்பு, வான் ஒவ்வொரு நாளும் காரில் 30 நிமிடங்கள் பயணிப்பதன் மூலம் உணவை வழங்க வேண்டியிருந்தது.

மேலும், தொழிலாளர்கள் பலர் மலை அடிவாரத்திலும், சிலர் எளிதில் அணுக முடியாத பகுதிகளிலும் வேலை செய்வதால்  உணவு வழங்கப்படும் நேரத்திற்குள், உணவு குளிர்ச்சியாகி விடும் என்றார் வான். தனது விநியோக செயல்முறையை விரைவுபடுத்துவதற்காக, வான் ஒரு புதிய திட்டத்தைக் கொண்டு வந்தார்.

மலையின் அடிப்பகுதியில் எளிதாக செல்வதற்கான ஒரு வழியாக அருகிலுள்ள ”பஞ்ஜி ஜம்பிங்”   ஸ்டேஷனைப் பயன்படுத்த அவர் முடிவு செய்தார். இந்த புதிய முறையின் மூலம், வானுக்கு உணவை வழங்க  இரண்டு நிமிடங்கள் மட்டுமே போதுமானது. அவரது அசாதாரண விநியோக முறையின் வீடியோ சமீபத்தில் பதிவேற்றப்பட்டு, மக்களை ஈர்த்தது.

இருப்பினும், ”பஞ்ஜி ஜம்பிங்” உண்மையிலேயே உணவை வழங்குவதற்கான ஒரு திறமையான வழியா என்று சிலர் ஆச்சரியப்பட்டனர். மற்றவர்கள் ஏன் உணவை சொந்தமாக தொழிலாளர்களுக்கு அனுப்பவில்லை என்றும் கேள்வி எழுப்பினர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker