Latestவாழ்க்கை

உதடுகள் இல்லாமல் பிறந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை!

மாஸ்கோ,ஜூன்.29- ஆறு வருடங்களுக்கு முன்பு உதடு இல்லாமல் பிறந்தவர் ரஷ்ய சிறுமி டிரினா ஷ்பெங்லர் .இவர் உடல் குறைபாடுடையவராக இதுவரை இருந்து வந்தார்.இவரின் முக அமைப்புக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் இவர் அரிய வகை உடல் குறைபாடுகளால் பாதிக்கப் பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதன் காரணமாக டிரினா குடும்பம், சமூகத்தில் அதிக நெருக்கடிகளை சந்தித்தது. ரஷ்ய மருத்துவர்களின் சிகிச்சை பலனளிக்காததால் ஆறு வயதான டிரினாவை பெற்றோர்கள் லண்டனுக்கு அழைத்து சென்றனர்.

தற்போது இவருக்கு லண்டனிலுள்ள கிரேட் ஆர்மண்ட் ஸ்ட்டீட் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது. இந்த அறுவை சிகிச்சை இவரின் வாழ்க்கை தரத்தையும் முக அமைப்பையும் மேம்படுத்தும் என பெற்றோர் மற்றும் மருத்துவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

ஏனைய குழந்தைகள் போல இந்த அறுவை சிகிச்சை மூலம் தன் மகளின் வாழ்க்கையில் தன்னம்பிக்கை மற்றும் மகிழ்ச்சி கிடைக்க வழி வகுக்கும் என்பதோடு பேசும் திறனையும் பெற்று அவளின் இனிய குரலை கேட்க ஆவலாய் இருப்பதாக அவளின் தாயார் திருமதி ஷ்பெங்லர் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker