Latestமலேசியா

தோட்டத் தொழிலுக்கு ஆப்பிரிக்க தொழிலாளர்கள்! -குலா தகவல்

கேமரன் மலை, ஜூன்.29- தோட்டத்தொழில் துறைக்கு தேவைப்படும் தொழிலாளர்களை ஈடுகட்ட ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து ஆள்களை வேலைக்குச் சேர்ப்பது குறித்து அரசாங்கம் யோசித்து வருவதாக மனித வளத்துறை அமைச்சர் எம். குலசேகரன் தெரிவித்தார்.

வியட்னாம் மற்றும் இந்தோனிசியாவைச் சேர்ந்த தொழிலாளர்கள் இதற்கு மேல் இங்கே வேலை செய்ய ஆர்வம் கொண்டிருக்கவில்லை. ஏனெனில் அவர்களுக்கு சொந்த நாட்டில் கிடைக்கும் சம்பளத்திற்கும் மலேசியாவில் கிடைக்கும் சம்பளத்திற்கும் அவ்வளவு வித்தியாசம் இல்லை என்று அமைச்சர் சொன்னார்.

இந்தச் சூழ்நிலையில் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் தோட்டத்தொழில் துறைக்கு பொருத்தமாக இருப்பார்களா? என்பது குறித்து நாங்கள் பரிசீலித்து வருகிறோம் என்றார் அவர்.

சம்பந்தப்பட்ட இந்த ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வேலை ஆள்களை எடுக்க தோட்டத்துறை முதலாளிகள் விரும்புகிறார்கள் என்று கேமரன் மலை விவசாயிகளுடன் நடந்த கலந்துரையாடல் ஒன்றின் போது குலசேகரன் தெரிவித்தார்.

இதனிடையே கடந்த கால புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அனைத்தும் காலாவதியாகி விட்டதால் வங்காள தேசப் பிரநிதிகளுடன் புதிய ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் சொன்னார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker