Latestவாழ்க்கை

பிரான்சின் மிகச் சிறந்த தாடி அழகன்… தமிழர் வெற்றி!

பாரிஸ்,ஜூன்.29- பிரான்ஸ் தலைநகர் பாரிசில் தாடி வைத்திருப்போருக்கான பிரத்தியோக சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.

குறித்த போட்டியில் மிகச்சிறந்த தாடி அழகன் பட்டத்தை ஈழத்தமிழர் ஒருவர் பெற்றுள்ளார். மேலும் இவருக்கு பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளது.

ஆண்கள் என்றாலே தாடியும் மீசையும் வளர்ப்பதில் அதிகம் ஆர்வம் காட்டுவது இயல்பு. அவ்வாறு ஆசையுடன் தாடியும் மீசையும் நீளமாக வளர்ப்போருக்கான சம்பியன்ஷிப் போட்டி இந்த ஆண்டு பாரிஸில் நடைபெற்றது.

15 பிரிவுகளாக நடந்த இந்தப் போட்டியில் 86 போட்டியாளர்கள் பங்கேற்று விதவிதமான மீசை தடை அலங்காரத்துடன் தோன்றினர்.

இப்போட்டியில் கலந்து கொண்ட ஈழத்தமிழரான மகேஸ்வரதாஸ் பிரதாஸ் முதல் சுற்றில் 86 தாடி அழகர்களுடன் போட்டியிட்டு பின்னர் 8 தாடியழகர்களுக்கு மத்தியில் 24 சென் மீட்டர் கொண்ட சிறந்த தாடி அழகனாக தேர்வு செய்யப் பட்டார்.

கடந்த நான்கு வருடங்களாக தாடி வளர்க்கும் 30 வயதைக் கொண்ட பிரதாஸ் தனது திருமணத்தின் பொழுதும் தாடியோடு தான் துணைவியின் கரம் பற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker