Latestஇந்தியா

புனே மகாராஷ்டிராவில் சுவர் இடிந்து 15 பேர் பலி!

புனே,ஜூன்,29- மகாராஷ்டிராவில் கடந்த இரண்டு நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. மும்பையில் பெய்த மழையால் நகர் முழுவதும் நீர் சூழலால் ஸ்தம்பித்துப் போயுள்ளது .

இந்நிலையில் புனே அருகே உள்ள கொந்துவா பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது .அங்கு உள்ள 65 அடி நீளம் கொண்ட சுற்றி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. சுவர் அருகில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் அனைத்தும் சுற்றுச்சுவரில் கீழ்நோக்கிப் பள்ளத்தில் உருண்டன. இதில் 15 பேர் பலியாகினர் .இறந்தவர்கள் அனைவரும் அங்குள்ள குடியிறுப்புவாசிகள் என நம்பப் படுகிறது.

இச்சுவர் இடுப்பில் மேலும் சிலர் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது. சம்பவ இடத்தில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் .புனேயில் இதுவரை வரலாற்றில் இல்லாத அளவிற்கு 2010க்குப் பின்னர் 7 செ.மீட்டர் மழை பெய்துள்ளது என்று கூறப் படுகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker