Latestசினிமா

போதுமடா சாமி… ‘பிக்பாஸ் 3 ‘கலாய்த்த நடிகை கஸ்தூரி!!

சென்னை, ஜூன்,28- ‘போதுமடா சாமி அழுவாச்சி… தாங்க முடியல’ என பிக்பாஸ் நிகழ்ச்சியைக் கலாய்த்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் நடிகை கஸ்தூரி. விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் 3 கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிகழ்ச்சி தொடங்கி சில நாட்களே ஆனாலும் பலரும் பல வகையில் கலாய்த்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக ஆரம்பம் முதலே நிறைய அழுகை காட்சிகள் ஒளிபரப்பப்பட்டு வருவதால் அதை கிண்டல் செய்து வருகின்றனர் .

இந்நிலையில் நடிகை கஸ்தூரி, பிக் பாஸ் நிகழ்ச்சியை கலாய்த்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் .போதுமப்பா இன்னும் எத்தனை நாளைக்கு சென்டிமென்ட்டை காட்ட போறீங்க..! இப்பவே யார் எவ்வளவு சோகத்தை சொன்னாலும் அழுவாச்சி வரல .இதுக்கு மேலயும் சோகத்தை புழியப் போறீங்களா! இந்த ஸ்ரீலங்கா பொண்ணு யுத்தத்தைப் பற்றி எதையாவது சொல்லிடப் போகுதோன்னு திக்கு திக்குன்னு இருக்கு!

இதை சேனல்ல கதை அல்ல என்று சொல்லி ஒரு நிகழ்ச்சிக்கு வந்தவங்கள அமுக்கி வைத்து கட்டாயமாக அழ வைப்பாங்க .இதில் ஆரம்பித்து எல்லா புரோகிராமிலும் அழுவாச்சி பிளாஷ்பேக். எங்க பிளாட்டில உள்ள எல்லா வீட்டுக் குழந்தைகளையும் இந்த நிகழ்ச்சியை பார்க்குறாங்க குழந்தைகள் பார்க்கும் நிகழ்ச்சியா இது! பெற்றோர்களே கொஞ்சம் பொறுப்புடன் இருங்கள் என தெரிவித்துள்ளார் நடிகை கஸ்தூரி.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker