Latestமலேசியா

மனவளர்ச்சி குன்றிய பெண் பாலியல் வன்கொடுமை – தந்தையும், நண்பரும் கைது

கங்கார், ஜூன் 29 – மனவளர்ச்சி குன்றிய பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய அவளின் தகப்பனாரும் அவரின் நண்பரும் கைது செய்யப்பட்டனர்.

அது சம்பந்தமாக சந்தேகத்தின் பேரில், 61 வயது தந்தையும் 53 வயதான அவரின் நண்பரும் 7 நாள்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டதாகப் பெர்லிஸ் போலீஸ் துணை ஆணையர் நூர் முஷார் முகமட் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட பெண் தனக்கு நேர்ந்த அவலத்தை அண்டை வீட்டாரிடம் தெரிவித்ததை அடுத்து, அந்தப் பெண்ணை அழைத்துச் சென்று போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

அந்தப் பெண்ணின் புகாரில் அவ்விருவரும் மே மாதம் தமது வீட்டில் கற்பழித்ததாகக் குறிப்பிட்டிருந்தார். அதே மாதம் தமது தந்தை தம்மை அந்த நண்பரின் தோட்டத்துக்கு அழைத்துச் சென்று இருவரும் கற்பழித்ததாகவும் தெரிவித்தார்.

தொடக்கக்கட்ட விசாரணையில், அப்பெண்ணை தந்தையே நண்பரைத் தூண்டி அக்காரியத்தைச் செய்யச் சொல்லியிருக்கிறார். மேலும், அந்தப் பெண்ணுக்கு நடந்ததை விவரித்துச் சொல்ல முடியவில்லை எனவும் தெரிகிறது.

அந்தப் பெண்ணுக்கு துவாங்கு பவுசியா மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. வழக்கு குற்றவியல் சட்டம் பிரிவு 372இன் கீழ் விசாரணை செய்யப்படும்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker