Latestமலேசியா

மாற்று திறனாளிகளுக்கு அரசுப் பணிகள் ; இன்னும் அதிகரிக்க கோரிக்கை

ஈப்போ, ஜூன்.29- அரசு சம்பந்தப்பட்ட பொதுத்துறைகளில் மாற்று திறனாளிகள் பணி புரிவது அதிகாமாக்கப்பட வேண்டும் என மகளிர், குடும்ப, சமூக நலத் துறை துணையமைச்சர் ஹனா இயோ கருத்துரைத்தார்.

அண்மைய காலமாக தனியார் துறைகளில் பணி புரியும் மாற்று திறனாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவர்களை வேலையில் சேர்த்துக் கொள்ள பல தனியார் துறை முதலாளிகள் தற்பொழுது முன்வருகின்றனர் என்பது மகிழ்ச்சியளிக்கிறது.

தனியார் துறைகள் இது போன்ற செயல்பாடுகளை முன்னெடுக்கும் பொழுது அரசு சம்பந்தப்பட்ட துறைகளும் மாற்று திறனாளிகளை பணியில் அமர்த்த தயக்கம் காட்ட கூடாது.

அரசு சார்ந்த துறைகளிலும் தற்பொழுது மாற்று திறனாளிகள் பலர் பணி புரிந்து வருகின்றனர். ஆனலும் அந்த எண்ணிக்கை வரும் காலங்களில் இன்னும் அதிகரிக்கப்பட வேண்டும்.

அதே சமயம் அவர்களுக்கு (மாற்று திறனாளிகள்) ஏற்ற, அவர்கள் செய்யக்கூடிய வேலைகள் வழங்கப்படுவதும் உறுதி செய்ய வேண்டும் என இன்று ஈப்போவில் நடைபெற்ற மாற்று திறனாளிகள் சம்பந்தப்பட்ட நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அவர் குறிப்பிட்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker