Latestமலேசியா

மூதாட்டி தாக்கப்பட்டார்: கிரேப் ஓட்டுநரின் ஆராஜகம்

கோலாலம்பூர், ஜூன் 29 –  கோலாலம்பூர் பெரிய மருத்துவமனைக்குச் செல்ல கிரேப் வாடகைக்காரில் ஏறிய மூதாட்டி ஓட்டுநரால் தாக்கப்பட்டது சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.

அந்தச் சம்பவம் வங்சா மாஜுவில் உள்ள தமது வீட்டுக்கு முன் நடந்ததாக அவின் என்பவர் குறிப்பிட்டிருந்தார்.  60 வயதான தமது தாயார் கிரேப் காரில் ஏறிய பின்னர், அழைக்கப்பட்ட ஓட்டுநர் அவர்தானா என கேட்டு, நீங்கள்தானா   பெரிய மருத்துவனைக்குச் செல்பவர் என வினவியபோது, காரின் எண் பட்டையைப் பார்க்க அந்த ஓட்டுநர் கோபத்தோடு பதிலளித்துள்ளார்.

சும்மா கேட்டதாகவும் அதற்கு ஏன் கோபப்பட வேண்டுமென  மூதாட்டி கேட்டபோது, அந்த ஓட்டுநர் அவர் மரியாதை இல்லாதவர் எனக் கூறியுள்ளார்.  மூதாட்டி, அவரும் அப்படித்தான், நரைத்த முடியாக இருந்தாலும் அவரும் மரியாதைக் குறைவாக நடந்து கொள்வதாகக் சொன்ன போது, அந்த ஓட்டுநர் ஆத்திரமடைந்து , காரில் இருந்து வெளியே வந்து, தமது தாயாரின் மீது காறி உமிழ்ந்து, அவரைத் தாக்கியதாக மூதாட்டியின் புதல்வியான அவின் தெரிவித்தார்.

அந்தச் சம்பவத்தைப் பார்த்த அங்கிருந்த பாதுகாலர் காருக்கு ஓடி வந்தபோது, அந்த கிரேப் ஓட்டுநர் அங்கிருந்து காரை ஓட்டுச் சென்று விட்டதாக  அவின் தமது முக நூலில் குறிப்பிட்டிருந்தார்.

சிகிச்சை அளிக்கப்பட்ட தமது தாயாருக்கு முகத்தில் தோல் கிழிந்திருப்பதாகவும் அது பற்றி தாம் போலீசில் புகார் அளித்திருப்பதாகவும் அவின் தெரிவித்தார். தமது தாயாரின் நிலை கண்டு தாம் மனம் கலங்கியதாகவும், இம்மாதிரியான சம்பவம் இனிமேலும் நடக்கக் கூடாது எனவும்  அவர் கேட்டுக் கொண்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker