Latestஇந்தியா

வாலிபர் உயிரைக் காப்பாற்றிய செல்பி!

கோட்டயம், ஜூன்.29- கேரளாவில் ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலைக்கு முயன்ற வாலிபர் ஒருவரை அவரது செல்பி போட்டோ காப்பாற்றியது .கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் சங்கனாச்சேரியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்ய முடிவெடுத்துள்ளார் .

அங்குள்ள ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்ய முயன்றார். தான் இறக்கப்போவதை ஒரு செல்பி எடுத்து குடும்பத்தினர், நண்பர்களுக்கு அனுப்பினார். செல்பி படத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், நண்பர்கள் தண்டவாளத்தில் மஞ்சள் நிற  மைல்கல மற்றும் பதிவு எண்ணை வைத்து ரயில்வே போலீசார் உதவியுடன் வாலிபர் எந்த தண்டவாளத்தில் தலை வைத்து உள்ளார் என கண்டுபிடித்தனர்.

அந்த வழித்தடத்தில் செல்லும் ரயில்கள் நிறுத்தப்பட்டன. பிறகு தற்கொலைக்கு முயன்ற வாலிபரை ரயில்வே போலீசார் காப்பாற்றி தகுந்த அறிவுரை வழங்கி வீட்டுக்கு அனுப்பிவைத்தனர். செல்பி எடுக்கும் சாகச முயற்சியில் பலர் இறந்துள்ளனர். செல்பியால் காப்பாற்ற பட்டவர் இவர் ஒருவராக தான் இருக்கும்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker