Latestமலேசியா

ஸாக்கிர் நாடு கடத்தல்: இந்தியாவின் கோரிக்கைக் கடிதம் கிடைத்தது – சைபுடின்

கோலாலம்பூர், ஜூன் 29 – சர்ச்சைக்குரிய சமய போதகர் ஸாக்கிர் நாயக்கை நாடு கடத்தக் கோரும் இந்தியாவின் கடிதத்தை பெற்றிருப்பதாக வெளியுறவுத் துறை அமைச்சர் சைபுடின் அப்துல்லா வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

எனினும், அவரை இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப் போவவதில்லை என்ற நிலைப்பாட்டில் மலேசியா உறுதியாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவின் கடிதத்தைத் தாங்கள் பெற்றிருப்பதாகவும் அது எப்போது என்பது நினைவில்லை என அவர் குறிப்பிட்டார்.

தற்போதைக்கு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டார். பண மோசடி வழக்கில் அவரை இந்தியாவுக்கு அனுப்பாமல் இருக்க மலேசியாவுக்கு உரிமை உள்ளதாகத் துன் மகாதீர் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker