Latestவிளையாட்டு

ஸ்வான்சீ மராத்தோன் – மலேசிய ஓட்டக்காரர் மரணம்

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 29- வேல்ஸ் நாட்டில் ஸ்வான்சீ பாதி நெடுந்தூரப் ஓட்டப் போட்டியில் பங்கெடுத்துக் கொண்ட மலேசிய ஓட்டக்காரர் ஒருவர் மயங்கி விழுந்து மரணமடைந்தார்.

ஞாயிற்றுக்கிழமை வில் சர் ஓங் என்பவர் அடிலேய்ட் சாலையில் 21 கிலோ மீட்டர் போட்டியில், முடிவடைய இருக்கும் சில மீட்டர் தூரத்தில் உள்ளூர் நேரப்படி காலை 13.20 (மலேசிய நேரம் 8.20) மணியளவில் மயங்கி விழுந்து மரணமடைந்தார்.

அவர் மோரிஸ்டன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு முதலுதவி கொடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.

ஸ்வான்சீ பல்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழல் பொறியியல் துறையில் பயின்று வருகிறார்.

இது அவர் கலந்து கொண்ட இரண்டாவது போட்டி என்றும் இதற்கு முன்னர் 2018இல் அவர் இது போன்ற ஓட்டப் போட்டியில் கலந்து கொண்டதாக பிபிசி தெரிவித்துள்ளது.

ஓங், பெட்டாலிங் ஜெயாவைச் சேர்ந்தவர் என்றும் இடைநிலைப் பள்ளிக் கல்விக்குப் பின்னர், அவர் ஸ்வான்சியில் கல்வி பயிலச் சென்றார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker