உலகம்

டிவி ஜோடி கணேஷ் நிஷாவுக்கு பெண் குழந்தை!

சென்னை, ஜூன். 30- கணேஷ் நிஷா இணையருக்கு பெண் குழந்தை ஒன்று  பிறந்துள்ள செய்தியை கணேஷ் தனது  இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருந்தார். அபியும் நானும், உன்னைப் போல் ஒருவன் படங்களில் நடித்தவர் நடிகர் கணேஷ் வெங்கட்ராமன். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான இவர், நிறைய படங்களில் நடிக்கவில்லை என்றாலும்  விளம்பரம் உள்ளிட்டவைகளில் பிசியாக உள்ளவர்.

இவர் தொகுப்பாளினியும் சின்னித்திரை நடிகையுமான நிஷாவை 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். நிஷா கர்ப்பமான விஷயத்தை சில மாதங்களுக்கு முன் தெரிவித்த கணேஷ் சமீபத்தில் நிஷாவிற்கு வளைகாப்பு நிகழ்ச்சியும் சிறப்பாக நடத்தி அது தொடர்பான புகைப்படங்களையும் சமூக வலைத்தளத்தின் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் கணேஷ் – நிஷா இணையருக்கு பெண் குழந்தை பிறந்துள்ள செய்தியை  தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு குழந்தையின் விரலை பிடித்தப்படி புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார் கணேஷ். பலரும் இத்தம்பதியினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker