Latestமலேசியா

தோட்டத் தொழிலுக்கு ஆப்பிரிக்கர்களா? குலசேகரனைச் சாடினார் ராய்ஸ்!

கோலாலம்பூர், ஜுன்.30- தோட்டத் தொழில் துறைக்கு ஆப்பிரிக்காவில் இருந்து தொழிலாளர்களை வேலைக்கு சேர்ப்பதற்கு குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது என்று மனிதவள அமைச்சர் எம். குலசேகரன் விடுத்த அறிக்கை தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் மூண்டுள்ளன.

பல தரப்புக்கள் இந்த அறிவிப்பை சாடியுள்ளன. இந்நிலையில் அம்னோ அரசாங்கத்தின் மூத்த அமைச்சர்களில் ஒருவராக இருந்த டான்ஸ்ரீ ராய்ஸ் யாத்திம், அமைச்சர் குலசேகரனின் இந்த அறிக்கையை கடுமையாக கண்டித்து இருக்கிறார்.

இது தொடர்பாக தமது டுவிட்டர் பக்கத்தில் அவர் தமது கருத்தை பதிவு செய்திருக்கிறார். அமைச்சர் குலசேகரன் இவ்வாறான அறிக்கைகளை நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையேல், மக்கள் தடுத்து நிறுத்த வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

கடல் தாண்டி ஆப்பிரிக்கர்கள் இங்கே வருவதை நிறுத்துங்கள். என்று பிரிபபூமி கட்சியின் உறுப்பினருமான அவர் சுட்டிக்காட்டி இருக்கிறார். வங்காளதேசம், பாகிஸ்தான், இந்தியா சீனா என பல்வேறு தரப்புக்கள் மூலமாக இங்கு ஏற்கனவே பெரும் பேதலிப்பு நிலவுகிறது என்று அவர் சொன்னார்.

உழைப்பை முழுமையாக நம்பி வாழ்வதற்கு தேவையான பயிற்சிகளை மலேசியர்களுக்கு நாம் முதலில் வழங்க வேண்டும். அவர்களுக்கு நல்ல சம்பளம் வழங்க முன்வரவேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

மனிதவள அமைச்சர் குலசேகரன் தொடர்பாக குறை கூறும் வகையில் ராய்ஸ் யாத்திம் அறிக்கை விடுவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே சில முறைகளிலும் சில முறைகள் அவர் இவ்வாறுதான் செய்திருக்கிறார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்தோனேசியர்களும் வியட்னாமியர்களும் மலேசியாவில் வேலை செய்வதற்கு விருப்பம் காட்டவில்லை. ஏனெனில் அவர்களுக்கு மலேசியாவில் கிடைக்கும் சம்பளத்திற்கும் அவர்களின் நாட்டில் கிடைக்கும் சம்பளத்திற்கும் அவ்வளவு வித்தியாசம் இல்லை என்று அண்மையில் கேமரன் மலையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் குலசேகரன் சுட்டிக் காட்டியிருந்தார்.

எனவே, தோட்டத் தொழில் துறைக்கு ஆப்பிரிக்காவில் இருந்து தொழிலாளர்களை கொண்டு வருவது தொடர்பாக அரசாங்கம் பரிசீலிக்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்திருந்த பிரதமர் துன் மகாதீர், இத்திட்டம் உத்தேச அடிப்படையில் ஒரு சாதாரண ஆலோசனையாகவே இருக்கிறது என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker