Latestஉலகம்

நாய் போல் சங்கிலியால் கட்டி வைத்து, மகன் சித்திரவதை

கிவ், ஜுலை 1- யுக்ரேய்ன் , ஐடார்  மைகோலைவ்கா எனுமிடத்தில் வீடொன்றில்  தந்தையால் நாய் போல  சங்கிலியால்  கட்டிப் போட்டு சித்திரவதைக்கு உள்ளான  சிறுவனை போலீசார் மீட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து அந்த தந்தையின் நண்பர்கள் அளித்த புகாரின்  அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அந்த வீட்டில் 6 வயது நிரம்பிய சிறுவன் ஒருவன் இடுப்புப் பகுதில் சங்கிலியால் கட்டப்பட்டு மண்டியிட்டவாறு காணப்பட்டதாகத் தெரிவித்தனர்.

மேலும், சம்பந்தப்பட்ட சிறுவனை விசாரித்தபோது, அந்தச் சிறுவன் தன்னை  தமது தந்தை கொடுமைப் படுத்தி வருவதை தமது நண்பர்களின் பெற்றோரிடம்  தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டதாக  டெய்லி மெயில்  செய்தி வெளியிட்டுள்ளது.

சிறுவனின் தந்தையை(வயது 36) விசாரித்த போது, தம்முடைய மகனை தாம் அடித்ததை ஒப்புக் கொண்டார். மேலும் மகனுக்குப் பாடம் புகட்டவே அப்படி செய்ததாகத் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் , குற்றஞ்சாட்டப்பட்ட அந்த நபர்  தம்முடைய மகனை வளர்க்கும் தகுதியை இழந்து விட்டார் என்றும்  மகனை அடித்துக்  கொடுமைப்படுத்தியதற்காக  ஐந்து ஆண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட சிறுவன் நோவோய்தார்ஸ்கி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர், சிறார் பராமரிப்பு இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டான்

இதற்கு முன்னதாக, பாதிக்கப்பட்ட அந்த சிறுவன் பராமரிப்பு இல்லத்தின் பொறுப்பில் இருந்து வந்ததாகவும்,  அச்சிறுவனின் தந்தை தமது மனைவியை விவாகரத்து செய்த பின்னர். புதிய மனைவியுடன் வாழத் தொடங்கியபோது  மீண்டும் அவனது  தந்தையுடன் வாழ அனுமதிக்கப்பட்டாதாகத் தெரிகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker