Latestசினிமா

நீச்சல் போட்டியில் சாம்பியனானார் மாதவன் மகன் வேதாந்த்!

சென்னை,ஜூலை.1-நடிகர் மாதவனின் மகன் தேசிய நீச்சல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் மாதவன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் இதற்கு முன் தாய்லாந்தில் நடந்த நீச்சல் போட்டியில் வெண்கல பதக்கத்தை வென்றார். தற்போது தேசிய அளவில் நடந்த போட்டியில் 3 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.

அடுத்ததாக அவர் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு தயாராக உள்ளார். இதுகுறித்து மாதவன் உங்கள் அனைவரையும் ஆசீர்வாதத்துடன்- நல்வாழ்த்துக்களுடன் கடவுளின் கிருபையால் மீண்டும் எங்களை பெருமைப்படுத்தியுள்ளார் வேதாந்த்.

ஜூனியர் தேசிய நீச்சல் போட்டியில் 3 தங்கங்கள், ஒரு வெள்ளி அவனது முதல் தனி தேசிய பதக்கங்கள். அடுத்தது ஆசிய விளையாட்டு போட்டிகள். மேலும் மும்பை கிளென்மார்க் பவுண்டேஷனுக்கு நன்றி. அனைத்து பயிற்சியாளர்கள் மற்றும் அணி உறுப்பினர்களுக்கு வாழ்த்து என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் .மாதவன் மகன் வெற்றிக்கு அவரது திரையுலக நண்பர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker