Latestஉலகம்

VIDEO – வரலாற்றுச் சம்பவம்; வட கொரியாவில் கால் பதித்த முதல் அமெரிக்க அதிபர்!

வட கொரியாவில் கால் பதித்த முதல் அமெரிக்க அதிபர் எனும் பெயரை டோனால்ட் டிரம்ப் பெற்றுள்ளார். இந்த வரலாற்றுப்பூர்வ சம்பவம் நேற்று வட கொரியா – தென் கொரியா எல்லையில் ராணுவம் விலக்கப்பட்டுள்ள பகுதியில் நிகழ்ந்தது. ஜப்பானில் நடைபெற்ற ஜி20 உச்சநிலை மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு டிரம்ப் அங்கு சென்றுள்ளார்.

முன்னதாக அந்நாட்டில் தாம் கால்பதிப்பதில் எவ்வித சர்ச்சையும் இல்லை என தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்த மறுநாள் இச்சந்திப்பு நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தை சர்வதேச ஊடகங்கள் பல நேரடியாக படம் பிடித்தன. வட கொரியா அதிபர் கிம் ஜொங் உன் அவரை நேரடியாக  வரவேற்றார்.
மேல் விவரங்களுக்கு காணொளி செய்தியில் காண்க.

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker