Latestஉலகம்

ஆணவக் கொலை: குடும்பத்தில் 9 பேரைக் கொன்ற பாகிஸ்தானியர்!

துபாய், ஜுலை 2-  துபாயில் வேலை செய்யும் பாகிஸ்தானியர் தன்னுடைய குடும்பத்தைச் சேர்ந்த  9 பேரைக் கொன்றார்.

சவூதி அரேபியாவில் தையல்காரராக வேலை செய்யும் அஜ்மால் தமது குடும்பத்தார் வசிக்கும் முல்தானுக்கு சில நாள்களுக்கும் முன்னர் திரும்பி இருக்கிறார்.

அங்கு தாம் இல்லாத வேளையில் தமது மனைவி கிரண்  வேறொருவருடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் மனைவி, இரு பிள்ளைகள், மாமியார் மற்றும் இரு மைத்துனிகளை அவர் சுட்டுக் கொன்றுள்ளார்.

அவரின் மாமனாருக்கும் மைத்துனருக்கும் துப்பாக்கிக் காயங்கள் ஏற்பட்டன. துப்பக்கிச் சூட்டுக்குப் பின்னர், அஜ்மாலின் தகப்பனாரும் சகோதரரும் வீட்டைப் பூட்டி அதற்குத் தீ வைத்துள்ளனர். அதன் காரணமாக அவரது இரு பிள்ளகள், இரு பெண்கள் ஆகியோர் உயிருடன் தீயில் கருகினர்.

அந்தச் கோடூர சம்பவத்தில் 8 பேர் சம்பவம் நடந்த இடத்தில் கொல்லப்பட்ட வேளையில், காயங்களுக்கு இலக்கான ஒருவர் முல்தானில் உள்ள நிஷார் மருத்துவமனையில் மரணமடைந்தார்.

சம்பவத்தைப் பார்த்துக் கொண்டிருந்தோர் மீதும் துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டது. அதில் ஒரு பெண்ணும் ஒரு குழந்தையும் காயமடைந்தனர்.

சம்பவத்தைத் தொடர்ந்து அஜ்மாலும் அவரது தகப்பனார் கைது செய்யப்பட்ட வேளையில், அவரின் சகோதரர் தப்பி ஓடியுள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker