Latestமலேசியா

சுங்கத்துறை மேற்பார்வை குழுவின் தலைவராக டத்தோஶ்ரீ சுப்ரமணியம் துளசி !

புத்ரா ஜெயா, ஜூலை.2- சிஒசி எனப்படும் சுங்கத்துறை மேற்பார்வை குழுவின் தலைவராக பொறுப்பேற்றுள்ள சுங்கத்துறையின் முன்னாள் தலைமை இயக்குனர் டத்தோஶ்ரீ சுப்ரமணியம் துளசி , இன்று புத்ரா ஜெயாவில் உள்ள சுங்கத்துறை தலைமை அலுவலகத்திற்கு வருகை புரிந்தார். சுங்கத்துறையின் நடப்பு தலைமை இயக்குனர் டத்தோ பாடீ பின் அப்துல் ஹலிம் அவரை வரவேற்றார்.

நேற்று (ஜூலை 1ஆம் தேதி) தொடங்கி இந்த மேற்பார்வை குழுவின் தலைவராக டத்தோஶ்ரீ சுப்ரமணியம் துளசி பொறுப்பேற்றுள்ளார். முன்னதாக அவர் சுங்கத்துறையின் தலைவராக கடந்த 2017ஆம் ஆண்டிலிருந்து பொறுப்பு வகித்து வந்தார். அவர் கடந்த மார்ச் 9ஆம் தேதியன்று அதிகாரப்பூர்வமாக பணி ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker