Latestமலேசியா

சொத்து அறிவிப்பைத் தவிர்க்க பாஸ் முயற்சி! சி-4 கண்டனம்!

கோலாலம்பூர், ஜூலை 2 – சொத்துகளை வெளிப்படையாக அறிவிப்பதைத் தவிர்க்க பாஸ் கட்சி சமயத்தைப் பயன்படுத்துவதாக சி-4 எனும் அணுக்கமானவர்களுக்கு சலுகைக் காட்டுவதை எதிர்க்கும் அரசு சாரா இயக்கம் சாடியுள்ளது.

மக்கள் பிரதிநிதிகள் கை சுத்தமானவர்களாக இருக்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். அவர்கள் நேர்மையாகவும் நியாயமானவர்களாகவும் சுத்தமானவர்களாகவும் இருக்க வேண்டுமென எதிர்ப்பார்ப்பு நிறையவே இருக்கிறது.

சொத்துகளை அறிவிக்க சமயம் தடை விதிப்பதாக நொண்டிச் சாக்குப் போக்கு கூறக் கூடாது என சி-4இன் தலைவரான  சிந்தியா கேப்ரியல் குறிப்பிட்டார்.

பாஸ் கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான் சமயம், சொத்தினை அறிவிக்க தடை விதிப்பதாகவும் இறைவனால் கொடுக்கபட்ட சொத்துகளை வெளிப்படையாக அறிவிக்க வேண்டியதில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

சிந்தியா மேலும் கூறும்போது, ஜனநாயக நாட்டில் இருக்கும் நாம் மக்களின் விருப்பத்துக்குக் கட்டுப்பட வேண்டும். மக்கள் பிரதிநிதிகள் மக்களின் நம்பிக்கையைப் பெற சொத்துகளின் விவரத்தைச் வெளிப்படையாக அறிவித்தே ஆக வேண்டுமென வலியுறுத்தினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker