Latestமலேசியா

பாசிர் கூடாங்கில் புதிய ரசாயன தொழிற்சாலைகள் இல்லை – இயோ

ஜோகூர் பாரு, ஜூலை 2 – பாசிர் கூடாங் வட்டாரத்தில் புதிய ரசாயன தொழிற்சாலைகளை அமைக்க அனுமதி கொடுக்கப்படாது என எரிபொருள், அறிவியல், தொழில்நுட்பம், பருவகால மாற்றம் துறை அமைச்சர் இயோ பீ இன் தெரிவித்தார்,

அது பற்றி மாநில அமைச்சோடு விவாதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

நேற்று நடந்த நகர அரங்க கருத்தரங்கில் அது பற்றிப் பேசப்பட்டதாகவும் இனி தொழிற்சாலைகளில் வாயுவைக் கண்காணிக்கும் கருவிகளைப் பொருத்த வேண்டுமெனவும், தொழிற்சாலைகள் வாயுவை அளக்கும் கருவிகளை பள்ளிகளுக்கு அளிக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்ளப்பட்டதாகத் தெரிவித்தார்.

கால்வாய்களில் வெளியிடும் கழிவுகளைப் பற்றிய விவரத்தை தொழிழிற்சாலைகள் வைத்திருக்க வேண்டு மென்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது. இதனிடையே அங்குள்ள தொழிற்சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

தஞ்சோங் புத்ரி இடைநிலைப்பள்ளி, கோத்தா புத்ரி தேசிய பள்ளி, ஶ்ரீ ஆலாம் தேசிய பள்ளிகளைச் சேர்ந்த 4 மாணவர்கள் மருத்துவமனையில் அமதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker