Latestமலேசியா

பினாங்கு ஃபெர்ரியில் இருந்து ஆடவர் விழுந்தாரா?

ஜோர்ஜ் டவுன், ஜூலை 2 –  நேற்று மாலையில் பட்டர்வொர்த்குக்கும் ஜோர்ஜ் டவுனுக்கும் இடையே சென்ற ஃபெர்ரியிலிருந்து ஆடவர் ஒருவர் விழுந்து மூழ்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது.

அந்த நபர் ஃபெர்ரியின் மேலடுக்கிலிருந்து மாலை மணி 6.15க்கு கடலில் விழுந்திருக்கலாம் என செபெராங் பிறை போலீஸ் தலைவர் நூர்சைனி முகமட் நூர் தெரிவித்தார்.

அவர் விழுந்ததை நபர் ஒருவர் பார்த்ததாகவும் அந்தப் ஃபெர்ரி பட்டர்வொர்த்திலிருந்து புறப்பட்ட 10 நிமிட நேரத்திற்குப் பின்னர் அந்தச் சம்பவம் நேர்ந்ததாகத் தெரிகிறது.

அந்தப் ஃபெர்ரியின் கீழடுக்கில் நிறுத்தி வைக்கப்பட்ட காரில் அதன் ஓட்டுநர் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் எண் பட்டையை வைத்துப் சோதனை செய்ததில்,  அது பெர்மாத்தாங் பாவில் உள்ள லை ஆ இன்(73) எனும் பெண்ணின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்ததாகத் தெரிகிறது.

கடல் துறை போலீசார மேற்கொண்ட தேடல் நடவடிக்கையில் எந்தச் சடலமும் கிடைக்கவில்லை. இரவு 8 மணியளவில் தேடுதல் நடவடிக்கை நிறுத்தப்பட்டது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker