Latestஇந்தியா

40 பயணிகளின் உயிர்:-காப்பாற்றியது ஓர் ஒற்றை மரம்!

பழனி,ஜூலை.2-நீலகிரியில் அரசு பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் ஒன்று பல அடி பள்ளத்தில் தலைகுப்புற கவிழ இருந்த அந்த பஸ்ஸை ஒற்றைமரம் ஒன்று தடுத்து 40 பயணிகள் உயிரை காப்பாற்றியுள்ளது .


திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து உதகைக்கு அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது.
பேருந்தில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். உதகைக்கு வரும் வழியில் பிக்கட்டி பகுதியில் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த இடத்தில் பேருந்து திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து இடது புறமிருந்த பள்ளத்தில் இறங்கியது. இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் அலறி கூச்சலிட்டனர்.

இருப்பினும் பக்கவாட்டில் இருந்த ஒரு மரத்தின் மீது மோதி பஸ் நின்றது. இதனால் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். அது மரமா!பயணிகளின் உயிர் காத்த வரமா என அவ்வட்டார மக்கள் அம்மரத்தை நன்றியோடு பெருக்கெடுத்து பார்க்கின்றனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker