Latestஉலகம்

அமெரிக்க அதிபர் வேட்பாளர் போட்டி:- இரண்டாம் இடத்தில் கமலா ஹாரிஸ்!

வாஷிங்டன் ,ஜூலை.3- அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளருக்கான போட்டியில் இந்தியாவை சேர்ந்த கமலா ஹாரிஸ் இரண்டாம் இடத்தில் உள்ளார் .ஜனநாயக கட்சியின் அமெரிக்க அதிபர் வேட்பாளருக்கான போட்டியில் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் இரண்டாம் இடத்துக்கு முன்னேறி வருவதாக கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது .

தமிழகத்தை சேர்ந்த தாய்க்கும் அமெரிக்கா தந்தைக்கும் பிறந்த கமலா ஹாரிஸ் அமெரிக்க அதிபருக்கான தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் தேர்தலுக்கு தயாராகி வருகிறார்.

அதற்காக நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் கமலா ஹாரிஸ் சிறப்பாக பேசியதால் அவருக்கான வாய்ப்பு அதிகரித்துள்ளதாகவும் முதலிடத்தில் உள்ள முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனுக்கு அடுத்தபடியாக கமலஹாரிஸ் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளதாகவும் க்வின் பியாக் தேசிய பல்கலைக்கழகம் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

கடந்த மாதம் நடந்த விவாதத்தின் போது வெறும் 7 சதவீதத்தை பெற்றிருந்த கமலா ஹாரிஸ் தற்போது 22 சதவீதத்துடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker