Latestவாழ்க்கை

குஞ்சுகளுக்கு சிகரெட் துண்டுகளை ஊட்டும் பறவைகள் !

புளோரிடா,ஜூலை.3- அமெரிக்காவில் பறவை ஒன்று தனது குஞ்சுகளுக்கு சிகரெட் துண்டுகளை ஊட்டும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது .அமெரிக்காவில் உள்ள புளோரிடா கடற்கரையில் பிளாக் பறவை ஒன்று தனது குஞ்சுகளுக்கு மீதமுள்ள சிகரெட் பட்ஸ் ஒன்றை ஊட்டும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படம் வைரலானதோடு மனிதர்களின் மோசமான முகத்தையும் வெளிப்படுத்துவதாய் உள்ளது. சிகரெட் துண்டுகளை உணவென்று தவறாக எண்ணி தனது குஞ்சுகளுக்கு பறவைகள் அளிக்கின்றன.

கடந்த 39 ஆண்டுகளில் இந்த கடற்கரையில் இருந்து மட்டும் 50 மில்லியன் சிகரெட் துண்டுகளை எடுக்கப்பட்டுள்ளதாக ஆய்வு ஒன்று கூறுகிறது. இன்று இந்த உலகம் மனிதர்களுக்கானது மட்டுமல்ல மற்ற உயிரினங்களுக்கும் ஆனது என்பதனை மறந்து மனிதர்கள் சுற்றுச்சூழலை மோசமாக்கி வருகின்றனர்

இந்த புகைப்படத்தை எடுத்தவர் கவிஞர் கரென் மேசன். இப் புகைப்பட த்தை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிந்த அவர், ‘நீங்கள் புகைக்கின்றீர்கள் என்றால் மீதமுள்ள சிகரெட் பட்ஸ்களை கண்மூடித்தனமாக கீழே தூக்கியெறிந்து விட்டு செல்லாதீர்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker