Latestவிளையாட்டு

கோப்பா அமெரிக்கா: அர்ஜெண்டினாவை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு பிரேசில் தேர்வு

பெலோ ஹோரிஷோன்டே, ஜூன். 3- தென் அமெரிக்காவின் கோப்பா அமெரிக்கா கால்பந்து போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் பிரேசிலிடம் 2-0 என்ற கோல்கணக்கில் அர்ஜெண்டினா வீழ்ச்சி கண்டது.

மிகவும் பரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் வென்றதன் வழி பிரேசில், ஞாயிறன்று நடக்கவிருக்கும் இறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்றது.

அரையிறுதி ஆட்டத்தின் போது அர்ஜெண்டினா தொடக்கம் முதல் கொண்டே அதிரடியாக தாக்குதல் நடத்தியது. எனினும் அதன் முன்னணி வீரர் அக்குயேரா மற்றும் லியோனல் மெஸ்சி ஆகியோர் நடத்திய தாக்குதல்கள் பிரேசிலின் கோல்கம்பத்தில் பட்டு இருமுறை பந்து வெளியேறிய போது பிரேசில் ரசிகர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

பதிலடியைத் தொடங்கிய பிரேசில் வீரர் கேப்ரியல் ஜீசஸ் மற்றும் ஃபிர்மினோ ஆகியோர் இரு கோல்களை அடித்து தங்கள் குழுவை வெற்றிப் பாதைக்கு கொண்டு வந்தனர்.

ஆட்டத்தை சமமாக்க அர்ஜெண்டினா மேற்கொண்ட முயற்சிகள் கடைசி வரை பயனளிக்கவில்லை. உலகப் புகழ்ப் பெற்ற கால்பந்து வீரர் மெஸ்சி தலைமையிலான அர்ஜெண்டினா, தொடர்ந்து அனைத்துலக கால்பந்து அரங்கில் குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெறமுடியாமல் தவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கோப்பா அமெரிக்காவின் மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் சிலியும் பெருவும் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் குழு இறுதியாட்டத்தில் பிரேசிலுடன் மோதவிருக்கிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker