Latestஇந்தியா

சென்னையில் நீர் பஞ்சம் ; தண்ணீர் லாரிகளுடன் மக்கள் “ போர்”

சென்னை, ஜூலை.3- தொடர் வறட்சி காரணமாக சென்னையில் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான நீருக்கு இப்பொழுது பெரும் மவுசு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பங்காரம்பேட்டை பகுதிவாழ் மக்கள், அப்பகுதியில் நீர் உறிஞ்ச வரும் தண்ணீர் லாரிகளுடன்  “ போர்” நடத்தி வருகின்றனர்.

கடந்த மாதம் சுமார் 150 பொதுமக்கள் ஒன்று சேர்ந்து அப்பகுதியில் நீர் உறிஞ்ச வந்த லாரியை மடக்கி பிடித்து அதனை சேதப்படுத்தி போலீசிடம் ஒப்படைத்தனர். தற்பொழுது  அம்மக்கள்  நகர் புற தேவைகளுக்காக  நீர் எடுக்க வரும் தனியார் லாரிகளை தாக்குவது மட்டுமின்றி  அப்பகுதிக்கு செல்லும் வழிகளையும் முடக்கியுள்ளனர்.

இந்த தனியார் லாரிகள் இங்குள்ள கிணற்றிலிருந்து தினமும் ஆயிரக் கணக்கான லீட்டர் நீரினை உரிஞ்சு செல்கின்றன. இதனால் அக்கிணறு வற்றி விட்டது என அப்பகுதி மக்கள் அரசாங்கத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர்.

நீர் நிர்வாகத்தின் பலவீனம் , மழை பற்றாக்குறை ஆகிய காரணங்களினால் சென்னைக்கு  நீர் தருவிக்கும்  ‘இந்தியா டெட்ராய்ட்’ என்று அழைக்கப்படும் நான்கு நீர்த்தேக்கங்களும் தற்பொழுது வற்றியுள்ளது.

கடும் வறட்சி காரணமாக சென்னையில் பல பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. சில நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய பணித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker