Latestமலேசியா

மக்களுக்கு பயனளிக்கும் என்றால் ஆளும் கட்சியுடன் இணையத் பணியாற்றத் தயார் ! – வீ க சியோங்

 

கோலாலம்பூர், ஜூலை.3- மக்களுக்கு பயனளிக்கும் காரியங்கள் என்றால், ஆளும் கட்சியுடன் இணைந்து பணியாற்றுவதில் எதிர்கட்சிக்கு எவ்வித பிரச்சனையும் கிடையாது என மசீசவின் தேசியத் தலைவர் டத்தோ ஶ்ரீ வீ கா சியோங் கருத்துரைத்துள்ளார்.

 

இன்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத் தொடரின் இடைவேளை நேரத்தில் இளைஞர்- விளையாட்டுத் துறை அமைச்சர் சைட் சாடிக் என்னை சந்தித்து வாக்கு செலுத்தும் குறைந்தபட்ச வயது 18 ஆக கூட்டரசு கட்டமைப்பு உருமாற்றுவது குறித்து கலந்துரையாடினார்.

நாட்டிற்கு நன்மை ஏற்படுத்தும், அதே நேரத்தில் இளைஞர்களின் உன்னத கனவை நினைவாக்கும் எந்தவொறு திட்டத்தையும் அரசாங்கத்துடன் இணைந்து முன்நடத்த நானும் மசீசா கட்சியும் தயாராக உள்ளோம்.

இந்த விவகாரத்தை அனுபவமிக்க எதிர்கட்சி தலைவர்கள் வரவேற்க வேண்டும். ஆனால் அதே சமயம்  தகுந்த அரசியல் அறிவு, நடப்பு சட்ட விமர்சனம் போன்ற விவகாரங்களை கருத்தில் கொண்டு வாக்களிப்பதற்கான வயது சட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என அவர் தமது இன்ஸ்தாகிராம் பக்கத்தில் அமைச்சுருடனான சந்திப்பு புகைப்படத்துடன் கருத்து பதிவேற்றம் செய்துள்ளார்.

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker