Latestமலேசியா

வாழ்நாள் தடை விதித்தாலும்: நிச்சயமாக மக்களவைக்கு வருவேன் – தாஜுடின்

கோலாலம்பூர், ஜூலை 3 – வாழ்நாள் முழுக்க தம்மை தடை செய்தாலும் தாம் வழக்கம் போல மக்களவைக்கு வரப்போவதாக பாசிர் சாலாக் நாடாளுமன்ற உறுப்பினர் தாஜுடின் அப்துல் ரஹ்மான் சூளுரைத்தார்,

அமைச்சர் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டிய கட்டத்தில், விவசாயம், விவசாயம் சார்ந்த விவகார அமைச்சர் சலாஹுடின் அயுப்பிற்குப் பதிலாக அவரின் துணை அமைச்சர் சிம் ட்செ ட்சின் பதிலளித்த போது, தாஜுடின் அமைச்சர் மட்டுமே பதிலளிக்க வேண்டுமென வற்புறுத்தியதை அடுத்து, சபாநாயகர் ஙா கோர் மிங்கிற்கும் தாஜுடினுக்கும் கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது.

இறுதியில் தாஜுடினுக்கு நான்கு நாள்களுக்குத் தடை விதிப்பதாக ஙா கோர் மிங் உத்தரவிட்டார்.

அது பற்றிக் குறிப்பிட்ட தாஜுடின், சபாநாயகர் நேர்மையின்றி செயல்படுவதாகவும், அதனை தாம் மதிக்கப்போவதில்லை என்றும் நாடாளுமன்ற அவைக்கு வரப் போவதாகவும் குறிப்பிட்டார்.

தாம் சுதந்திரமாக எங்கும் செல்ல உரிமை உள்ளதாகவும் சபாநாயகர் தம்மைத் தடுக்க முடியாது எனவும் சவால் விடுத்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker