Latestமலேசியா

ஷாம்பு – முகம் கழுவும் சவக்காரத்தை விழுங்கும் இளம் பெண் !

கோலாலம்பூர், ஜூலை.3- இளம் பெண் ஒருவர் தலை முடிக்கு பயன்படுத்தும் ஷாம்பு, முகம் கழுவும் சவக்காரம் ஆகியவற்றை விழுங்கும் புகைப்படங்கள் மற்றும் காணொளி சமூக வலைத் தளங்களில் வெளிவந்துள்ளன.

முதலில் இச்சம்பவம் குறித்த புகைப்படங்கள் குறிபிட்ட ஒரு பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டு அதில், அப்பெண் காதல் தோல்வியினால் ஷாம்பு அருந்த முற்படுகின்றார்,  பாவம் அவர் என கருத்து பதிவேற்றமும் செய்யப்பட்டது.

இந்த புகைப்டங்கள் சமூக வலைத் தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து மற்றொரு பேஸ்புக் பக்கத்தில் இச்சம்பவத்தின் காணொளியும் வெளியிடப்பட்டது.  இச்சம்பவம் குறித்து சமூக தளவாசிகள் அப்பெண்ணின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

.இன்னும் சிலர், ஷாம்பு அருந்தினால் உயிருக்கு ஆபத்து ஏற்படாது என்பதை தெரிந்து கொண்ட பின்னர் தான் அப்பெண் அச்செயலை செய்துள்ளார் என்றும் விமர்சித்து வருகின்றனர். ஆனால் அப்பெண் காதல் தோல்வியினல் தன் இந்த செயலை செய்தர் என்பது இதுவரை உறுதியாக தெரியவில்லை.

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker