Latestமலேசியா

8 வயது சிறுவனை காணவில்லை।- தகவல் தெரிந்தோர் உதவுக!

கோலாலம்பூர், ஜூலை 3 – நேற்று முன்தினம்  ‘கம்போங் கெரடாக் சேராதூஸ்’ கோலா பெசுட் திரங்கானுவில்  வீட்டின் அருகாமையில் இருக்கும் ஒரு கடையில் காலையுணவை வாங்க சென்ற 8 வயது சிறுவன் ஒருவன்  காணாமல் போனதால் மலேசிய காவல்படை பொதுமக்களின் உதவியை நாடுகிறது.

மலேசிய காவல்படை தலைமை தொடர்பு ஆணையர் டத்தோ அஸ்மாவாத்தி அகமத் குறிப்பிடுகையில், காணாமல் போன சிறுவன் முகமட்  சைபுல்   அய்மான் முகமட் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அச்சிறுவன் 135 சென்டிமீட்டர் உயரமும், 35 கிலோ எடையும் கொண்ட மாநிற உடல் எனவும் அவர் மேலும் சொன்னார்.  சம்பந்தப்பட்ட சிறுவன் மஞ்சள் நிறத்தில் கருப்பு கோடுகள் போட்ட ஜெர்சி வகை ஆடையையும் அணிந்திருந்தான் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தகவல் தெரிந்த பொது மக்கள் உடனடியாக அருகிலிருக்கும் பெசுட் காவல்துறை தொடர்பு எண் 09-6956222,  அல்லது, இன்ஸ்பெக்டர் சித்தி பாத்திமா முகமட் சைட் தொடர்பு எண் 013-4579857 -யை  அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker