Latestஉலகம்

இரசாயனக் குளத்தில் விழுந்த ஆடவர் உயிர் தப்பினார்

சேன்ட் பிட்டர்ஸ்பேர்க், ஜூலை 4,  தார் இரசாயனக் கழிவு கலக்கப்பட்ட குளத்தில் தவறி விழுந்த ஆடவர்  உயிர்  தப்பினார்.  இச்சம்பவத்தில்  ரஷ்யாவிலுள்ள  தொழிற்சாலை ஒன்றிலிருந்து  அகற்றப்பட்ட  தாரில் இரசாயனக்  கழிவு அங்குள்ள குளத்தில் கலக்கப்பட்டது தெரிய வந்தது.

மேலும்,  பாவ்லோவ்ஸ்கில் நகருக்கு அருகாமையிலுள்ள தொழிற்சாலையில்  இருந்து வெளியான  இரசாயனக் கழிவு கலந்த அக்குளத்தில் தவறி விழுந்த அந்த நபரை அங்குள்ள பொதுமக்கள் காப்பாற்றியுள்ளனர் என ஆன்லைன் செய்தி வெளியிட்டிருந்தது.

இச்சம்பவம் குறித்து வெளியான புகைப்படங்களில் தார் கலந்த குளத்தில் விழுந்த பெயர் குறிப்பிடாத  அந்த 33 வயது நிரம்பிய ஆடவரின் உடல் முழுவது கருப்பாகக் காணப்பட்டது. மேலும் அந்த ஆடவர் வலியினால் தவித்துள்ளார் என கூறப்பட்டது.

வலியால் துடித்த அந்த ஆடவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அங்குள்ள தாதியர்கள் அவர் உடல் முழுவதுமுள்ள அந்த கருப்பு சாயத்தை அகற்ற பிலேடு கத்திகளை பயன்படுத்தியுள்ளனர். பல மணி நேர போரட்டத்திற்கு பிறகு அந்த ஆடவரின் உடல் முழுவதும் இருந்த தாரை முழுமையாக அகற்றியுள்ளனர்.

சிகிச்சைக்கு பிறகு அந்த ஆடவர்  எவ்வித பாதிப்பின்றி உயிர் தப்பி மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளார் என மருத்துவர்கள் கூறினர்.

விசாரணையில் சம்பந்தப்பட்ட அந்த குளத்தில் தார் மற்றும் மற்ற இராசயண கழிவுகள் அங்குள்ள தொழிற்சாலையிலிருந்து கோட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. மேலும், இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க அந்த நகரத்தில் பொறுப்பு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட குளத்தைச் சுத்தம் செய்யக் கோரியுள்ளனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker