Latestமலேசியா

எல்ஆர்டி கட்டுமானம்: 600 உடல்கள் வேறு இடத்துக்கு மாற்றப்படும்

ஜோர்ஜ் டவுன், ஜூலை 4-  பினாங்கில் திட்டமிடப்பட்ட எல்ஆர்டி ரயில் திட்டத்தின் காரணமாக முஸ்லிம் மையத்துக் கொல்லையில் புதைக்கப்பட்டிருக்கும்  600 சடலங்கள் வேறு இடத்துக்கு மாற்றப்படும்.

சுங்கை நிபோங் பெசார் பள்ளிவாசல் நடவடிக்கைக் குழுவின் தலைவரான சொபியான் முகமட் சின் என்பவர் அந்த பள்ளிவாசல் வளாகத்தில் 2.5 கிலோ மீட்டர் சுற்று வட்டாரத்தில் 600 சடலங்கள் புதைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

நேற்று  சடலங்களை அகற்றக்கூடாது என போராட்டம் ஒன்று நடத்தப்பட்டதில் 60 பேர் திரண்டு தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

சடலங்களை அகற்றுவது சமயத்துக்கு முரணாக இருப்பதால் அந்த இடத்தை அகற்றக் கூடாது என கேட்டுக் கொண்டார். அந்த எல்ஆர்டி திட்டமானது பள்ளிவாசலுக்குப் பின்னால் செல்ல திட்டமிடப்பட்டது. ஆனால், தற்போது அதன் ஊடே செல்வதாகச் சொல்லப்படுகிறது.

இதற்கு முன்னர் பினாங்கு அரசு கொடுத்த வாக்குறுதிக்கு மாறாக செயல்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker