Latestவிளையாட்டு

ஏரியில் மாயமானார் சுவிஸ்  கால்பந்து வீராங்கனை!

இத்தாலி,ஜூலை,4- சுவிட்சர்லாந்துக்காக 33 முறை விளையாடிய பிரபல கால்பந்து வீராங்கனை ஒருவர் இத்தாலியிலுள்ள  ஒரு ஏரியில் குதித்த போது மாயமானார்.
அல்பேனியா பின்னணி கொண்ட புலர்ஜினா இஸ்மாயிலி  2011 முதல் சிறப்பாக விளையாடி வந்தவர்.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை சுவிஸ் எல்லையிருந்து  இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இத்தாலிய  கோமொ ஏரியில் வாடகை படகொன்றில் இஸ்மாயிலி  நண்பர் ஒருவரும் பயணித்துள்ளனர்.


அப்போது கரையில் இருந்து 100 மீட்டர் தொலைவில் பயணிக்கும் போது இஸ்மாயிலி ஏரியில் குதித்துள்ளார். வெகுநேரமாகியும் அவர் தண்ணீர் மட்டத்துக்கு மேலே வராமல் போகவே அவரது நண்பர் உதவி கோரி குரல் கொடுத்துள்ளார் .

தொடர்ந்து தீவிரமாக தேடியும் இஸ்மாயிலின் உடல் கிடைக்கவேவில்லை. பின்னர் ரோபோ ஒன்றின் உதவியுடன் தண்ணீருக்குள் தேடும் போது மூன்று நாட்களுக்குப் பின் செவ்வாயன்று ஏரியின் அடியில் 669 அடி ஆழத்தில் இஸ்மாயிலி உடல் சிக்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இஸ்மாயிலின் மறைவில் மட்டுமல்ல உலகெங்கும் உள்ள கால்பந்தாட்ட ரசிகர்கள் துக்கத்தில் ஆழ்த்தி உள்ள நிலையில் பல்வேறு தரப்பினரும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker