Latestசினிமா

நாளை வெளிவரவிருந்த  களவாணி-2க்கு நீதிமன்றம் தடை!

சென்னை ஜூலை, 4-  நடிகர் விமல் மற்றும் நடிகை ஓவியா ஆகியோர் நடித்துள்ள களவாணி 2 படம் நாளை வெளிவரவிருந்த நிலையில் இன்று  இங்குள்ள  உயர் நீதிமன்றம்  படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்துள்ளது.

இயக்குனர் சற்குணம் இயக்கிய களவாணி திரைப்படம் 2010 ஆம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.  தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டுள்ளது படப்பிடிப்பு முடிந்து படம் ரிலீசாக தயாரான நிலையில் இருந்தது.

நாளை இந்தப் படம் ரிலீசாக இருந்தது .  எனினும் படக் குழுவினர் திட்டமிட்டிருந்தபடி நாளை இந்த படத்தை வெளியிட இயலாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

படத்தின் இணை தயாரிப்பாளரான ஜெயக்குமார் இந்தப் படத்திற்கு தடை கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.  அப்போது களவாணி 2   படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்தப் படத்தில் விமல் மற்றும் ஓவியா ஆகியோர் முன்னணி பாத்திரங்களில் நடிதுள்ள நிலையில், சரண்யா பொன்வண்ணன், இளவரசு, கஞ்சா கருப்பு, என முதல் பாகத்தில் நடித்த அத்தனை பேரும் இந்தப் படத்தில் நடித்து இருக்கிறார்கள். கூடுதலாக மயில்சாமி போன்ற இன்னும் சில முக்கிய நடிகர்கள் படத்தில் இடம் பெற்று இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker