Latestஉலகம்

பிலிப்பைன்ஸில் 8 வயது மகளை கொதிக்கும் கரித்துண்டுகளில் முட்டியிட செய்த தாய்!

பகாடிங் சிட்டி, ஜூலை 4  –  8வயது  நிரம்பிய  சிறுமி ஒருவர் நீண்ட நாட்களாக பள்ளிக்கு வராததால் விபரம் அறிய  வீட்டிற்குச்  சென்ற ஆசிரியர் அச்சிறுமியின் முட்டிக் கால்களில் தீக்காயங்கள் இருப்பதைக் கண்டு அதிர்ந்து போனார்.

போலீஸ் விசாரணையில், செயின்ட் ஜான் புனித நாளன்று, அந்த ஆசிரியர் தம் மாணவர்களை வழக்கத்திற்கு மாறாக சற்று முன்னதாகவே அனுப்பி விட்டார். அந்நேரம் மழை பெய்து கொண்டிருந்ததால் மாணவர்கள் அனைவரும் அதில் விளையாடி குதூகலித்தனர்.

கெளரியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பின்னர் எடுத்து கொள்ளலாம் என்று எண்ணி வகுப்பறையிலேயே தன் புத்தகப்பையை வைத்துவிட்டு விளையாடச் சென்றுள்ளார். ஆனால் திரும்பிவருகையில் வகுப்பறை பூட்டியிருந்ததால் அருகில் இருக்கும் தன் வீட்டிற்கு சென்றுள்ளார்.

வெறுங்கையோடு திரும்பிவந்த மகள் வகுப்பிற்கு மட்டம் போட்டுவிட்டதாக  சந்தேகித்து மீண்டும் பள்ளிக்குச் சென்று புத்தகப் பையை எடுத்துவரச் சொல்லியுள்ளார்.

அச்சிறுமியும் மீண்டும் அங்கு சென்று பார்க்கையில், வகுப்பறை பூட்டிக் கிடந்ததால் வீட்டிற்கே  வந்துவிட்டாள். அவள் புத்தகப் பையோடு வராததால் ஆத்திரமடைந்த அவளின் தாயார் கடினமான பொருளால் அடித்து பின் அடுப்பிலிருந்து கரித்துண்டுகளை எடுத்து வந்து அதில் முட்டியிடுமாறு தண்டனை கொடுத்துள்ளார்.

நீண்ட நாள்களாக அந்தச் சிறுமி பள்ளிக்கு வராததால் ஆசிரியர் சந்தேகமடைந்து  வீட்டிற்கு சென்று பார்க்கையில்தான் இக்கொடூர சம்பவம் அம்பலமானது.

அந்த ஆசிரியர் உடனடியாக அருகிலிருக்கும் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.சம்பந்தப்பட்ட பெற்றோருக்குப் பிள்ளைகளைக் கடுமையான பொருட்கள் கொண்டு அடிக்கும் பழக்கமும் இருந்ததாக தெரிய வர  துணை மேயர் டெல்ஃபினா கோர்டினா இனிமேலும் அடித்து துன்புறுத்த கூடாததென உத்தரவிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது அவளில் பாட்டியின் பராமரிப்பில் வளர்கிறாள். மேலும் அப்பெற்றோரின் மீது எவ்வித வழக்கும் தொடரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker