Latestமலேசியா

12ஆவது மலேசியத் திட்டம்: இந்தியர்களின் நலன் காக்க – பணிக் குழு

கோலாலம்பூர், ஜூலை 4 – இந்திய சமூகத்தின் நலன்காக்க வியூகங்களையும் கொள்கைகளையும் வகுக்க சிறப்புப் பணிக்குழு அமைக்கப்படுவதாகப் பிரதமர் துறை அமைச்சர் பி.வேதமூர்த்தி அறிவித்துள்ளார்.

இந்திய சமுகத்தில் சமூக பொருளாதார வியூகங்களை வகுக்க அந்தப் பணிக்குழு தமக்கு உதவியாக இருக்கும் என அவர் குறிப்பிட்டார்.

பெறப்படும் வியூகங்களும் கொள்கைகளும் 12ஆவது மலேசியத் திட்டத்தில் ஒருங்கிணைக்கப்பட்டு 2020ஆம் ஆண்டு மூன்றாவது காலாண்டில் மக்களவையில் சமர்ப்பிக்கப்படும். 2021 முதல் 2025 வரைக்குமான மலேசிய திட்டம் பக்காத்தான் அரசினால் முன்வைக்கப்படும்.

அது சம்பந்தமாகத் தாம் பல ஆலோசகர்களிடமும் நிபுணர்களிடமும் ஆலோசனை நடத்தி இருப்பதாகவும் இந்திய சமூகத்தின் பி40 தரப்பார் நன்மையடைய 12ஆவது மலேசியத் திட்டத்தில் பரிந்துரைக்கப்படும்.

இந்தியர்கள் தேசிய நீரோட்டத்தில் விடுபடாமல் இருக்க ஆவண நடவடிக்கை எடுக்கப்படும். பயனான பரிந்துரைகளைத் தெரிவிக்க விரும்புவோர் சே சாம் மானாப் என்பரின் தொலைபேசி 03-88727128 அல்லது chesam jpm.gov.my என்ற மின்னஞ்சல் வழியாகத் தொடர்பு கொள்ளலாம்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker