Latestசினிமா

ஜாமீன் ரத்து !சல்மானுக்கு ‘குத்து ‘!

ஜோத்பூர்,ஜூலை. 5- அடுத்த முறை விசாரணைக்கு நேரில் ஆஜராக விட்டால், முன்னர் வழங்கிய ஜாமீன் ரத்து செய்யப்படும் என்று ஜோத்பூர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மான் வேட்டையாடிய பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் மீது ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது .கடந்த 1998 ஜனவரி கங்காணி எனுமிடத்தில் அரியவகை மானை வேட்டையாடினார் என்பதே வழக்காகும்.

இதில் கடந்த 2018 இல்  5 ஆண்டு சிறை தண்டனை வழங்கி மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனை எதிர்த்து சல்மான்கான் ஜோத்பூர் செசன்ஸ் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார் .ஏப்ரல் மாதம் சல்மான் கானுக்கு ஜாமீன் வழங்கி இருந்தது.

பிப்ரவரி மாதம் விசாரணை தொடங்கி ஏப்ரல் 3 மட்டுமன்றி ஜூலை 4 என்று இருமுறை உத்தரவிட்டது. ஆனால் மூன்றாவது முறையும்  சல்மான்கான் கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதனால் அடுத்த முறை விசாரணைக்கு சல்மான்கான் ஆஜராகாவிட்டால் அவரது ஜாமீன் ரத்து செய்யப்படும் என்று  ஜோத்பூர் கோர்ட் எச்சரித்துள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker