Latestமலேசியா

பள்ளிகளுக்கு இனி ‘புல்லெட்’ ரயில் வேக இணையச் சேவை! -அமைச்சு முயற்சி

கோலாலம்பூர், ஜூலை. 5- பள்ளிகளுக்கு இணையச் சேவை வழங்கும் ஒய்.டி.எல். நிறுவனத்தின் குத்தககையை கல்வி அமைச்சு ரத்து செய்துள்ளது என்பதை கல்வியமைச்சு மறுத்துள்ளது.

ஒய்.டி.எல். நிறுவனம் வழங்கிய 380 கோடி ரிங்கிட் மதிப்பிலான இரண்டு கட்ட சேவைக் குத்தகைகளும் ஜூன் 30 ஆம் தேதியோடு ஏக காலத்தில் முடிவடைகிறது என்று செய்தியாளர்கள் கூட்டத்தில் கல்வி அமைச்சின் தலைமை இயக்குனர் முகம்மட் கஷாலி அப்பாஸ் கூறினார்

இப்போது பள்ளிப் பிள்ளைகளுக்கான இணையச் சேவையை இந்தத் துறையிலுள்ள சிறந்த நிறுவனங்கள் வழங்குவதற்கான ஏறபாட்டைச் செய்ய அரசாங்கம் விரும்புகிறது என்றார் அவர்.

ஒய்.டி.எல். வழங்கும் இணையச் சேவையின் வேகத்தை ஒரு சைக்கிளின் ஓட்டத்துடன் தான் ஒப்பிடமுடியும். ஆனால் இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியுடன் ஒப்பிடும் போது அதே விலைக்கு நாம் புல்லெட் ரயில் வேகத்தில் இணையச் சேவையை வழங்குவது குறித்து பரிசீலித்து வருகிறோம் என்று முகம்மட் கஷாலி சொன்னார்.

ஒய்.டி.எல். விதிக்கும் கட்டணம் மிகக் கூடுதலாக இருப்பதாக குறைகூறல்கள் எழுந்துள்ளன. குறிப்பாக மாதம் ஒன்றுக்கு ஒரு பள்ளிக்கு 19 ஆயிரம் ரிங்கிட் வரை கட்டணம் விதிக்கப்படுவதாக கூறப்பட்டது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker