Latestமலேசியா

விபத்துக்குள்ளான காரினுள் களவாடப்பட்ட மாடு

கெமாமான், ஜூலை 5 – ஆடவர் ஒருவரின் கார்  விபத்துக்குள்ளானதில், அதன் உள்ளே இருந்த மாடு  களவாடப்பட்டது  என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

நேற்று காலை 8.50  மணியளவில் கிழக்குக்கரை நெடுஞ்சாலையின் 308.6 கிலோ மீட்டரில் இச்சம்பவம் நடந்தாகக் கூறப்படுகிறது.

32 வயது மதிக்கத்தக்க அந்த ஆடவன் புக்கிட் பிசி டுங்குனிலிருந்து புக்கிட் குவாந்தான் நோக்கி வந்து கொண்டிருந்தாகத் தெரிகிறது. அப்போது அவனின் புரோட்டோன் சாகா BLM ரக கார் கட்டுபாட்டை இழந்து சாலைத் தடுப்பில் மோதி எதிர் சாலையில் நுழைந்ததாகத்  தெரிகிறது.

மலேசிய போலீஸ் நெடுஞ்சாலை ரோந்துப்படையினர் விசாரிக்கையில், விபத்துக்குள்ளான காரில் மாடு ஒன்று இருந்ததாகவும், அந்த மாடு களவாடப்பட்டதாக  இருக்கலாம் என அவர்கள் சந்தேகிக்கின்றனர்.

கெமாமான் மாவட்ட போலீஸ் தலைவர்  சூப்பரின்டெண்டன்  முகமட் சைட் குறிப்பிடுகையில், இதுவரை மாடு களவாடபட்டுள்ளதாக எவ்வித புகாரையும்  பெறவில்லை.  மேலும் அந்த ஆடவனை மேல் விசாரணைக்காக தடுத்து வைத்திருப்பதாகத் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker